[X] Close

திட்டமிட்டப்படி ஆக.31க்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் : ஜோ பைடன்

உலகம்

US-to-complete-its-evacuation-mission-in-Afghanistan-by-August-31-says-Joe-Biden

தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளிநாட்டினரும், அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தர்களும் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்கள், அமெரிக்கப் படைகள் திட்டமிட்டப்படி வெளியேற வேண்டும் என்றனர். மேலும், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தர்கள் வெளியேற தடைவிதிக்கப்படும் என்றும் கூறினர். இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து நடைபெற்ற ஜி7 மாநாடு நடைபெற்றது.

image


Advertisement

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கைவிடுத்தன. எனினும் அதை ஏற்க மறுத்த பைடன், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என்றார். இதனிடையே ஆட்சி அதிகாரத்தை கவனிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை தலிபான்கள் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close