[X] Close

ஆப்கன் விவகாரம் : ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

உலகம்

Indian-Prime-Minister-Narendra-Modi-spoken-through-Russian-President-Putin-over-Telephone-regarding-situation-in-Taliban-controlled-Afghanistan

ஆப்கானிஸ்தான் நாட்டு விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடி உள்ளார். 


Advertisement

இருநாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடங்கள் இது தொடர்பாக தொலைபேசியில் பேசி உள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாகவும், தூரிதமாகவும் மீட்க வேண்டும் என பிரதமர் மோடி சம்பந்தப்பட்ட துறையின் ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement

image

தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அச்சத்தின் காரணமாக ஆப்கன் நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். இதில் வெளிநாடு மற்றும் ஆப்கன் நாடுகளை சேர்ந்த மக்களும் அடக்கம். அதனால் ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் பதற்றமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் தலிபான் தரப்பினருடன் உடன்படிக்கையின் படி அந்நாட்டிலிருந்து வெளிநாட்டு படையினர் முழுவதுமாக பின்வாங்க வரும் 31-ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் அனைவரையும் சம்பந்தப்பட்ட நாடுகள் வெளியேற்றியாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close