[X] Close

இந்தியாவின் 4வது நிறுவனம்: இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்

வணிகம்

Infosys-has-became-India-s-fourth-largest-company-and-has-a-market-capitalization-of-100-US-Dollar-billion

தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவைத் தொட்டது.


Advertisement

ஜிஎஸ்டி-க்கான வலைதளத்தைப் போன்றே புதிய வருமான வரித்துறையின் வலைதளத்தையும் இன்ஃபோசிஸ் வடிவமைத்து வருகிறது. ஆனால், அந்தத் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் நீடித்து வந்ததால், அது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இன்ஃபோசிஸ். எனினும், இந்தப் பின்னடைவு சூழல் எதுவும் இன்ஃபோசிஸ் பங்கு வர்த்தகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

image


Advertisement

இன்றைய வர்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்கின் விலை ஒரு சதவீதம் அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தொட்டது. இதன் ரூபாய் மதிப்பு ரூ.7.45 லட்சம் கோடி. இந்த எல்லையைத் தொடும் நான்காவது இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் ஆகும். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (140 பில்லியன் டாலர்), டிசிஎஸ் (115 பில்லியன் டாலர்), ஹெச்.டி.எப்.சி. வங்கி (100.1 பில்லியன் டாலர்) ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு இன்ஃபோசிஸ் இப்போது இந்த எல்லையைத் தொட்டிருக்கிறது.

இந்த ஆண்டு சென்செக்ஸ் 16 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஆனால், இன்ஃபோசிஸ் 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வருமானம் வளர்ச்சி 14 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கும் என கணித்திருக்கிறது. முந்தைய கணிப்பை விட (12% -14% ) வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதால் இந்தப் பங்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.


Advertisement

52 வார உச்சபட்ச விலையான ரூ.1,755 என்னும் விலையை இன்ஃபோசிஸ் இன்றைய வர்த்தகத்தில் தொட்டது.


Advertisement

Advertisement
[X] Close