[X] Close

"லார்ட்ஸ் தோல்வியிலிருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம்; மீண்டு வருவோம்" - ஜோ ரூட் நம்பிக்கை

விளையாட்டு

We-have-done-some-good-learning-in-Lord-s-test-match-against-India-Says-England-Cricket-Captain-Joe-Root

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக கண்ட தோல்வியிலிருந்து நல்ல பாடம் கற்றுள்ளோம் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்தியா 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. 


Advertisement

image

இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் புதன் அன்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரூட் இதனை தெரிவித்துள்ளார். 


Advertisement

“லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நல்ல பாடம் கற்றோம். அந்த போட்டியில் சில விஷயங்களை நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்க வேண்டும் என கருதுகிறேன். இதை நான் அந்த போட்டி முடிந்தவுடனும் சொல்லி இருந்தேன். இந்த தொடரில் இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. நிச்சயம் எங்களால் வலுவாக கம்பேக் கொடுக்க முடியும் என நம்புகிறேன். 

விராட் கோலி மற்றும் அவரது அணியினர் எப்படி விளையாடுவார்களோ அப்படி விளையாடி உள்ளனர். இப்போது எங்களது இயல்பான ஆட்டத்தை நாங்கள் விளையாடியாக வேண்டும். களத்தில் என்ன நடந்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார் ரூட். 


Advertisement

Advertisement
[X] Close