[X] Close

புதுச்சேரி: ’இடிமுழக்கம்’ படப்பிடிப்பு தளத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்த விஜய் சேதுபதி

சினிமா

Vijay-Sethupathi-in-the-shooting-spot-of-Seenu-Ramasamy-IdiMuzhakkam

சீனு ராமசாமியின் ’இடிமுழக்கம்’ படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ் விசிட் செய்துள்ளார்.


Advertisement

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் ஜி.வி பிரகாஷுடன் ’இடிமுழக்கம்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதுவரை வந்த சீனு ராமசாமியின் படங்களில் சற்று மாறுதலாக, ஆக்‌ஷன் த்ரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படம் என்று சொல்லப்படுகிறது. ஸ்கைமேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரிக்கிறார்.

image


Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தேனியில் 20 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் தொடர்கிறது. அதே பாண்டிச்சேரியில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த விஜய் சேதுபதி ஸ்வீட் சர்ப்ரைஸாக சீனு ராமசாமி ‘இடிமுழக்கம்’ படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து படக்குழுவினருடன் உரையாடினார். இந்தப் புகைப்படங்களை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது.

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close