[X] Close

தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து பவுலர் மார்க்வுட் லீட்ஸ் டெஸ்டிலிருந்து விலகல்

விளையாட்டு

England-Fast-Bowler-Mark-Wood-pulled-out-of-the-Third-Test-against-India-due-to-shoulder-injury-ECB

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி வரும் புதன் அன்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து பவுலர் மார்க்வுட் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 


Advertisement

image

அவருக்கு வலது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


Advertisement

“இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. பந்து வீச அவர் ஃபிட்டாக இல்லாத காரணத்தினால் இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர் தொடர்ந்து அணியுடன் பயணிப்பார். அவரை அணியின் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். லீட்ஸ் டெஸ்டின் முடிவின்போது மீண்டும் அவரது உடல் திறன் பரிசோதிக்கப்படும்” என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. பிராட், வோக்ஸ், ஓலி ஸ்டோன் என இங்கிலாந்து பவுலர்கள் காயம் காரணமாக விளையாடாமல் உள்ளனர். 

image


Advertisement

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணியை மார்க்வுட் தனது பந்துவீச்சின் மூலம் எழுச்சி பெறச் செய்தார். ரோகித், ராகுல், புஜாரா என இந்தியாவின் மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களை அவர் இரண்டாவது இன்னிங்ஸில் அவுட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close