[X] Close

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் கரை ஒதுங்கிய ஸேண்ட் டாலர்ஸ்

சுற்றுச்சூழல்

Thousands-of-Sand-Dollars-off-the-coast-of-Oregon-in-USA-and-Marine-biologists-shocked-after-this-incident

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் அமைந்துள்ள ஸி-ஸைட் கடற்கரையில் ஆயிர கணக்கான ஸேண்ட் டாலர்கள் கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்துள்ளன. அதற்கான காரணம் தெரியாமல் கடல்வாழ் உயிரின வல்லுனர்கள் குழப்பம்  அடைந்துள்ளனர். 


Advertisement

அதென்ன ஸேண்ட் டாலர்?


Advertisement

கடலில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஸேண்ட் டாலர். உலக அளவில் இவை இருந்தாலும் அமெரிக்க கடல் பகுதியில் அதிகம் இதனை பார்க்க முடியும். Sea urchin-களுடன் தொடர்புடைய உயிரினம். நீர் நிலைகளில் மிதந்து வாழ்கின்ற உயரினமான Plankton தான் இதற்கு உணவு. இதன் வாய் அதன் உடலின் கீழ்ப்பக்கத்தின் மையத்தில் இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

மூன்று முதல் நான்கு இன்ச் வரை இவை இருக்குமாம். அதன் உடல் பகுதியில் உள்ள Pattern-கள் பார்ப்பதற்கு இலைகளால் டிசைன் செய்தது போல இருக்குமாம். வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டதாம் இது. 


Advertisement

இப்படிப்பட்ட உயிரினமான ஸேண்ட் டாலர்கள் ஆயிர கணக்கில் ஓரிகன் கடற்கரையில் ஒதுங்கி உள்ளன. உயரமான அலைகளில் இவை சிக்கி கரை பகுதிக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் தண்ணீருக்குள் திரும்ப முடியாமல் அவர கரையிலேயே மடிந்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது இந்த பகுதியில் மட்டும் தான் நடந்துள்ளதா அல்லது மற்ற பகுதிகளிலும் நடந்துள்ளாத என்பது தெரியாது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸேண்ட் டாலர்கள் கரைக்கு அடித்து வரப்பட்ட படங்களை ஸி-ஸைட் அருங்காட்சியகம் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close