[X] Close

திருச்சி: மத்திய அரசின் தங்க நகை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நகைக் கடையினர் போராட்டம்

வணிகம்

Trichy--Jewelery-shopkeepers-protest-to-repeal-the-Central-Government-s-Gold-Jewelery-Act

மத்திய அரசின் தங்க நகை சட்டத்தை (HUID) ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் உள்ள நகை கடைகள் மூன்று மணி நேரம் அடைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.


Advertisement

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தங்க நகை சட்டத்தின்படி அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும், அதுமட்டுமல்லாமல் ஹால்மார்க் அடையாள எண் படிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு தங்க நகை விற்பனையாளர் சங்கத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

image


Advertisement

அதன் பின்னணியாக, ஹால்மார்க் அடையாள எண் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் நகை வாங்கும் பொழுது அதை கொடுப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், தாலி, மூக்குத்தி போன்ற மங்கலப் பொருட்களில் அடையாள எண்ணை பொரிக்கும்போது நகை சேதமடைய அதிக வாய்ப்பு இருப்பதாலும், பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிலவுகிறது எனக்கூறுகின்றனர். எனவே இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

image

மேலும், ‘அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும் என்ற நடவடிக்கையை வரவேற்கிறோம். எனினும், ஹால்மார்க் அடையாள எண் பதிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், தாமதம் உள்ளிட்ட காரணங்களினாலும் அதை கைவிடவேண்டும்’ என்றும் வலியுறுத்தி திருச்சி பெரிய கடை வீதி, சின்னக்கடை வீதி பகுதிகளிலுள்ள நகை கடை வியாபாரிகள் கடைகளை அடைத்தும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Advertisement

- பிருந்தா


Advertisement

Advertisement
[X] Close