[X] Close

நைஜீரியா: பணம் கேட்டு 100 மாணவர்கள் கடத்தல்; பணயத்தொகை செலுத்தியதால் 15 பேர் விடுவிப்பு

உலகம்

The-parents-of-15-of-the-100-students-abducted-by-robbers-in-Nigeria-have-been-released-on-bail
நைஜீரியாவில் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 100 மாணவர்களில் 15 பேரின் பெற்றோர் பணயத் தொகையை வழங்கியதால் விடுவிக்கப்பட்டனர்.
 
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஒரு பள்ளியில் துப்பாக்கிகளுடன் கடந்த மாதம் 5-ஆம் தேதி புகுந்த கொள்ளையர்கள், 100 மாணவர்களை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றனர். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் சுமார் 10 லட்சம் நைஜீரிய கரன்சியை வழங்க கொள்ளையர்கள் நிபந்தனை விதித்தனர்.
 
பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது 28 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். மற்ற மாணவர்களை கொள்ளையர்கள் வேறு இடத்துக்கு கடத்திச் சென்ற நிலையில், 15 மாணவர்களின் பெற்றோர் பணயத் தொகையை அளித்ததால் அவர்கள் மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள மாணவர்களை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொள்ளையர்கள் வைத்துள்ளனர்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை நைஜீரியாவில் பணயத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Advertisement

Advertisement
[X] Close