[X] Close

படப்பை அருகே வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

தமிழ்நாடு

Robbery-Attempt-by-mysterious-persons-by-cutting-the-window-bars-of-the-bank-near-Padappai-Kanchipuram-Tamil-Nadu

படப்பை அருகே சவுத் இந்தியன் வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் சவுத் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் உள்ள லாக்கரை யாரோ உடைக்க முயற்சி செய்யும்பொழுது அதனால் அலாரம் ஒலித்துள்ளது. மேலும் வங்கி மேலாளர் இருக்கும் லாக்கரை உடைக்க போது அதன் எச்சரிக்கை கிடைத்துள்ளது. உடனடியாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வங்கிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வங்கியின் உள்ளே இருந்த இரண்டு ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் வங்கியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியிலிருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்க படவில்லை என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். லாக்கரை உடைக்கும் பொழுது அலாரம் ஒலித்ததால் உள்ளே வந்த மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார். மேலும்

வங்கியில் இரவு காவலர் இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் உடனடியாக இரவு காவலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close