Published : 22,Aug 2021 09:50 PM

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைக்கத் திட்டம்?- அதிமுக ட்விட்டரில் வீடியோ வெளியீடு

Plan-to-link-TN-Legislative-Assembly-Opposition-leader-Edappadi-K-Palaniswami-in-Kodanad-case-and-AIADMK-Party-Official-twitter-handle-releases-a-video-related-to-this

கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க சயன், மனோஜ் ஆகியோர் திட்டமிடுவதாக காணொலி ஒன்று அதிமுக அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதீப் என்பவர், சயன் மற்றும் மனோஜிடம் கோடநாடு வழக்கில், ஈபிஎஸ், ஓபிஎஸை சேர்ப்பது குறித்து பேசுவது அந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் சிக்க வைப்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே கோடநாடு வழக்கிலிருந்து சயன், மனோஜ் தப்ப முடியும் என அவர்கள் பேசுவது வீடியோவிலுள்ளது. இந்த வீடியோவிலுள்ள பிரதீப் என்பவர் டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலின் பிரதிநிதி என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலிடம் கேட்டதற்கு, தனக்கும் அந்த வீடியோவிற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தன்னை இணைத்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்