[X] Close

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து எழுச்சி பெற சூப்பர் மேன் போல செயல்பட வேண்டும் : கவாஸ்கர்

விளையாட்டு

Former-Indian-Cricketer-Sunil-Gavaskar-says-England-need-to-put-superhuman-effort-to-get-the-come-back-in-the-five-match-Test-Series-against-India-at-their-home-soil

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 1 - 0 என இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 


Advertisement

image

இந்நிலையில் இந்த தொடரில் இங்கிலாந்து எழுச்சி பெற சூப்பர் மேன் போல செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். 


Advertisement

“இந்தியாவின் ஆட்டம் இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் மன அளவில் தாக்கத்தை கொடுத்திருக்கும். அந்த தாக்கத்திலிருந்து அவர்கள் மீண்டு வர சர்வ வல்லமை பொருந்திய சூப்பர் மேன்களை போல ஆற்றலை வெளிப்படுத்தினால் மட்டுமே உண்டு. அதன் மூலம் தொடரிலும் கம்பேக் கொடுக்கலாம். 

கிரிக்கெட் களம் எப்போதும் அதிசயங்கள் நிறைந்தது. லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் ஐந்தாம் நாளன்று ஆட்டமே தலைகீழாக மாறியது. அதே நேரத்தில் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆட்டத்தின் போக்கை மாற்றும் பென் ஸ்டோக்ஸ் மாதிரியான திறன் படைத்த வீரர்களை மிஸ் செய்கிறது. ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் ரூட்டை மட்டுமே நம்பியுள்ளது இந்த பின்னடைவுக்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் வரும் புதன்கிழமை அன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி சில மாற்றங்களுடன் இந்த போட்டியை அணுக உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close