[X] Close

ஐபிஎல் 2021 : ஐக்கிய அமீரக போட்டிகளில் இருந்து முன்னணி வெளிநாட்டு வீரர்கள் விலகல்

விளையாட்டு

Here-is-the-list-of-players-who-was-out-of-action-In-UAE-leg-IPL-2021-Season

ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. 


Advertisement

இந்நிலையில் அமீரக ஷெட்யூலில் இருந்து முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விலகி வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி காயம், மனநலன், தனிப்பட்ட காரணங்கள் வரை அந்த காரணம் நீள்கிறது. 

image


Advertisement

அப்படி விலகியுள்ள வீரர்கள் யார்? யார்?

கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் பட்லர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர், பெங்களூரு அணியில் ஆடம் சாம்பா, டேனியல் சாம்ஸ், ஃபின் ஆலன் மற்றும் கேன் ரிச்சர்ட்சன், பஞ்சாப் அணியின் மெரிடித் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியுள்ளனர். 

விலகி உள்ள வீரர்களுக்கு மாற்று வீரர்களை சேர்க்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அணிகள் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் சில அணிகள் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்தும் உள்ளன. 


Advertisement

image

புள்ளிப்பட்டியலில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் முதலிடத்தை பிடித்துள்ளன. இரு அணிகளும் சில வெற்றிகளை பதிவு செய்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்லும் நிலையில் உள்ளன. 


Advertisement

Advertisement
[X] Close