[X] Close

தடுப்பூசி முகாமில் கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் கைது

வீடியோ ஸ்டோரி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தடுப்பூசி முகாமில் நடந்த தகராறின்போது, கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

வெள்ளக்கோயில் பாளையத்தில் நடந்த தடுப்பூசி முகாமின்போது, அதிமுக பிரமுகரான சுப்ரமணியம் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தடுப்பூசி காத்திருந்தவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருக்கிறார். அப்போது முகக்கவசம் அணியாமலும், கூட்டமாகவும் வந்து உணவு வழங்கலாமா என இளங்கோ என்பவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியம், இளங்கோவை தகாத வார்த்தையில் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து இளங்கோ அளித்த புகாரின் பேரில் சுப்ரமணியத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close