[X] Close

பழனி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் - நோய் பிரச்னை காரணமா என போலீஸ் விசாரணை

தமிழ்நாடு

பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி உயிரிழந்த வழக்கில், உடல் நலக்குறைவு காரணமாக எடுக்கப்பட்ட விபரீத முடிவா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

வத்தகவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன், அவரது மனைவி வளர்மதி, பிள்ளைகள் சிவரஞ்சனி, கார்த்திகேயன் ஆகியோரின் உடல்கள், வீட்டின் அருகே பற்றி எரிந்த சோளத்தட்டைகளின் கீழே கண்டெடுக்கப்பட்டது. கருகிய உடல்கள் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

image


Advertisement

மருத்துவர்கள் முத்துக்குமார், சித்திக் ஆகியோர் நடத்திய உடற்கூராய்வில், நான்கு பேரின் உடலிலும் விஷம் இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த முருகேசன், கடந்த ஆறு மாதங்களாக தூக்கமின்மை நோயினாலும், அவரது மகன் கார்த்திக் சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு சிகிச்சை எடுத்ததும், அதன் பிறகு முருகேசனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மன உளைச்சலில் இருந்த முருகேசன் குடும்ப உறுப்பினர்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.

ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடன் பிரச்சினையால் தற்கொலையா, வேறு ஏதும் குடும்ப பிரச்சினை உள்ளதா என்ற கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close