[X] Close

35 நாட்களுக்கு பின் குறைந்த பெட்ரோல் விலை

வணிகம்

petrol-price-reduced

இந்தியாவில் பெட்ரோல் விலை 35 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் குறைக்கப்பட்டு 99 ரூபாய் 32 காசுகளாக இருந்தது. டீசல் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 18 காசுகள் குறைக்கப்பட்டு 93.66 காசாக உள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இராது என்று வெளியான தகவல்களால் கச்சா எண்ணெயின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டெல்டா வகை கொரோனா அதிகரிப்பும் கச்சா எண்ணெய் விலை குறைய மறைமுகமாக வழிவகுத்துள்ளது. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close