[X] Close

நாமக்கல்: தாயை கொடூரமாக தாக்கிய மகன் - காப்பாற்ற முயற்சித்த நாய்

வீடியோ ஸ்டோரி

நாமக்கல் அருகே சேமிப்புத் தொகை 7 லட்சம் ரூபாயை தனக்கே தர வேண்டும் எனக் கூறி பெற்ற தாயை, நடுரோட்டில் வைத்து தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.


Advertisement

பொன்னேரிப்பட்டியை சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் என்பவர் 7 லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார். இவரது கணவர் இறந்ததையடுத்து, அவருக்கு சொந்தமான நிலத்தை மகன் சண்முகத்திற்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில், மூதாட்டி சேமித்து வைத்த 7 லட்சம் ரூபாயையும் கேட்டு சண்முகம் தாக்குதலில் ஈடுபட்டார்.

அப்போது மூதாட்டி நல்லம்மாள் வளர்த்துவந்த நாய், அவரை காப்பாற்ற முயற்சித்தது. கல் நெஞ்சம் கொண்ட மகன், பெற்ற தாயை தாக்கியபோது, நாய் காப்பாற்ற முயன்ற காட்சி நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதனிடையே தாயை தாக்கிய சண்முகத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக சண்முகத்தின் மனைவியை தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close