Published : 21,Aug 2021 08:11 PM

இனி ஃபேஸ்புக் மூலமாக இந்தியாவில் தொழில் கடன் பெறலாம்.!

Facebook-Joins-hands-with-Indifi-to-offer-loans-for-MSME-Sector-in-India

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு தொழில் கடன் வழங்க உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் இண்டிஃபை (Indifi) நிறுவனத்துடன் இணைந்துள்ளது ஃபேஸ்புக். இதனை இண்டிஃபை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் உறுதி செய்துள்ளார். 

image

கொரோனா பேரிடர் சூழலுக்கு மத்தியில் தங்களது தொழிலை சுணக்கமின்றி நடத்த இந்த தொழில் கடன் உதவும் என தெரிவித்துள்ளது ஃபேஸ்புக். இருந்தாலும் இதை செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு எந்தவித வருமானமும் இல்லை என்பதை ஃபேஸ்புக் சொல்லியுள்ளது. 

இந்த கடன் சேவையின் மூலம் 5 லட்ச ரூபாயில் இருந்து 50 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 17 முதல் 20 சதவிகிதம் வரை உள்ளது. பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவிகிதம் சலுகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்தியாவின் 200 நகரங்களில் மட்டும் இந்த கடன் சேவை கிடைக்கப்பெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்