[X] Close

உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் குமார்

விளையாட்டு

Indian-Athletes-win-Silver-medal-in-10000-metre-Race-Walking-Event-at-World-Athletics-U20-Championship

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய தடகள வீரர் அமித் குமார். ரேஸ் வாக்கிங் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். 


Advertisement

image

பந்தய தூரமான 10000 மீட்டரை 43 நிமிடங்கள், 17:94 நொடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார் அவர். கென்ய வீரர் ஹரிஸ்டோன் வானியோனி முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். தொடக்கம் முதலே ரேஸில் லீட் செய்து வந்த அமித், இறுதியில் சில லேப்களில் லீடிங் செய்வதை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

இதுவரை மொத்தமாக உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close