[X] Close

“வருது... வருது... டெஸ்லா ரோபோ” - எலான் மஸ்க்

டெக்னாலஜி

Tesla-Robot-Is-coming-soon-says-Elon-Musk-and-he-also-terms-the-prototype-of-the-robot-will-unveiled-by-coming-years

'ரோபோ’ படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 


Advertisement

உலக அளவில் முன்னணி செல்வந்தர்களில் ஒருவர் எலான் மஸ்க். அறிவியல் தொழில்நுட்பத்தில் அலாதி ஆர்வம் கொண்டவர். பெரும்பாலும் அவரது தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் அது சார்ந்தே இருக்கும். 

image


Advertisement

இந்நிலையில் அவரது டெஸ்லா நிறுவனம் ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டியைபோல ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

“5 அடி, 8 இன்ச் உயரமும், 125 பவுண்டுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம். மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையிலும் அதனை உருவாக்கி வருகிறோம். இதன் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும். மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும். 45 பவுண்ட் எடையை சுமக்கவும் இது செய்யும்” என தெரிவித்துள்ளார். 

இந்த ரோபோவின் முகத்தில் திரை (Screen) இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close