[X] Close

செய்தி எதிரொலி: வெடிப்புகளுடன் காணப்படும் வீடுகளை விரைந்து சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

தமிழ்நாடு

Perambalur-district-collector-orders-to-repair-Walls-of-government-s-houses

பெரம்பலூர் துறைமங்கலம் குடிசைமாற்றுவாரிய குடியிருப்புகளில் உள்ள பழுதை சீரைமத்து தருமாறு குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் குடிசைமாற்றுவாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி, தரமற்று இருப்பதாக அங்கிருக்கும் பயனாளிகள் புகார் தெரிவித்திருந்தனர். கை வைத்தாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும், தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான செய்தி புதியதலைமுறையில் நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி திருச்சி கோட்டை குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அழகுபொன்னையா, மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார் ஆகியோர் புகாருக்குள்ளான குடியிருப்பை ஆய்வுசெய்தனர்.


Advertisement

image

அங்கு, அதிகாரிகளை வீடு வீடாக அழைத்துசென்று பார்வையிடுமாறு குடியிருப்புவாசிகள் அழைத்து சென்று காண்பித்தனர். சேதமடைந்து காணப்பட்ட பகுதிகளையும், கைவைத்தாலே மணல் மணலாக உதிரும் பூச்சுகளைகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு குறிப்பெடுத்து சென்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் புகாருக்குள்ளான குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வீடுவீடாக சென்று பயனாளிகளிடம் என்ன என்ன குறைகள் இருக்கிறது என்று கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார் அவர். அப்போதும் குடியிருப்புவாசிகள் சிமெண்ட் பூச்சு உதிர்வது போன்ற குறைபாடுகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா, குடியிருப்பு பகுதியிலேயே மெயின்டனன்ஸ் அலுவலகம் இனி தினமும் செயல்படவேண்டும் என்றும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் பழுதுகளை சீரமைத்து தருமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் குடிசைமாற்று அதிகாரிகள் மற்றும் மெயின்டனன்ஸ் பார்க்கும் பணியாளர்கள் தொடர்பு எண் ஆகியவற்றை குடியிருப்பு வாசிகளுக்கு தெரியும் படி எழுதிவைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, ஆய்வில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் அவற்றை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பேட்டியளித்த குடிசைமாற்றுவாரிய அதிகாரி அழகுபொன்னையா, ஒப்பந்ததாருக்கு கொடுக்க வேண்டிய கடைசி பில் தொகை ரூ.2 கோடிக்கும் மேற்பட்ட தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close