Published : 20,Aug 2021 04:09 PM
"அஷ்ரஃப் கனி ஒரு வஞ்சகர்" - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அஷ்ரஃப் கனி மீது தான் ஒருபோதும் முழு நம்பிக்கை கொண்டதே கிடையாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அண்மையில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு. அதற்கு முன்னதாகவே நாட்டை விட்டு பறந்து சென்றார் அதிபர் பதவியில் இருந்து வந்த அஷ்ரஃப் கனி. தன் நாட்டு மக்களை சங்கடமான நிலையில் அவர் விட்டு சென்றதை குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். அதில் புதிதாக இணைந்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
“அஷ்ரஃப் கனி மீது ஒருபோதும் முழு நம்பிக்கை கொண்டதே கிடையாது. அவர் ஒரு வஞ்சகர் என்பதை நான் வெளிப்படையாகவே சொல்வேன். நமது செனட் குழு உறுப்பினர்களுக்கு விருந்தளிப்பதில் நேரத்தை கடத்தி வந்தார் அவர். அதன் மூலம் செனட் உறுப்பினர்களை எப்போதும் அவரது பாக்கெட்டுக்குள் அவர் வைத்திருந்தார்” என தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
தற்போது மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரஃப் கனிக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.