'பெட்ரோல் விலை குறைத்தார்கள்; ஆனால் அமலுக்கு வந்ததா?’ - குழம்பிய எல்.முருகன்  

'பெட்ரோல் விலை குறைத்தார்கள்; ஆனால் அமலுக்கு வந்ததா?’ - குழம்பிய எல்.முருகன்  
'பெட்ரோல் விலை குறைத்தார்கள்; ஆனால் அமலுக்கு வந்ததா?’ - குழம்பிய எல்.முருகன்   

பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பதாக சொன்னார்கள், ஆனால் அது அமலுக்கு வந்ததா? என்று குழம்பிய எல்.முருகன், பின்னர் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான 5 ரூபாயை ஏன் குறைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் ஆசி யாத்திரையை முடித்துவிட்டு சேலத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 43 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த 43 பேரும் பெரிய அரசியல் பின்புலம் இல்லாதவர்கள். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். 12 பட்டியிலன மக்களும், 8 பேர் மலைவாழ் மக்களும் அதில் இடம்பெற்றுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் எங்களைப்போன்ற புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கவிடாமல் எதிர்கட்சிகள் முடக்கிவிட்டனர். அவர்களின் கூச்சல் குழப்பத்தால் எங்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.

இதனால் மக்களிடையே நேரடியாக சென்று, மக்களிடம் ஆசி வாங்குவோம் என்று கூறி 43 அமைச்சர்களும், 'ஜங் ஆசீர்வாத் யாத்ரா' என்ற பெயரில்  நடக்கும் இந்த யாத்திரையை தமிழகத்தில், 'மக்கள் ஆசி யாத்திரை' என்று பெயர் மாற்றி கோவையில் யாத்திரையை தொடங்கினோம். 3 நாட்கள் நடத்தி சேலத்தில் முடித்திருக்கிறோம். மொத்தம் 326 கி.மீ. தூரத்தை கடந்து வந்துள்ளோம். 2014 பிறகு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. அந்த அளவுக்கு மோடி அரசு மீனவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது.

பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அது அமலுக்கு வந்துவிட்டதா இன்னும் வரவில்லை'' என்று அவர் கூறியதும், நிருபர்கள் அமலுக்கு வந்துவிட்டது என்றனர். பின்னர், ''5 ரூபாய் தானே சொன்னார்கள் ஆனால், 3 ரூபாய் தான் குறைந்துள்ளார்கள்'' என்று கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com