டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டன்

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டன்
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டன்

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணிக்கு அனுப வீரர் ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான டி20 அணியை நியூசிலாந்து அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ், டான் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டானியல் சாம்ஸ்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com