Published : 18,Aug 2021 09:53 PM
“அபுதாபியில்தான் இருக்கிறார் ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி” - ஐக்கிய அமீரகம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு அவர் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் கனிக்கு தஞ்சம் அளிப்பதாகவும் அமீரகம் கூறியுள்ளது.
முன்னதாக தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்த அதிபர் அஷ்ரஃப் கனி அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக திட்டமித்திருந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது . சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் ஆப்கனில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.