Published : 18,Aug 2021 06:22 PM

’இதனை நான் அணிந்தால்’ : பாக்ஸிங் கிளவுஸை பரிசளித்த லவ்லினா.. பிரதமர் சொன்ன அரசியல் ’ஜோக்’

Olympic-Medal-Winner-Lovlina-Borgohain-presents-her-boxing-glove-to-Prime-Minister-Narendra-Modi-and-she-reaches-her-village-and-people-gave-her-a-warm-welcome-to-the-boxing-star

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக குத்துச்சண்டை விளையாட்டில் வெண்கலம் வென்று வந்தார் லவ்லினா. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்காக பிரதமர் மோடி நடத்திய விருந்து நிகழ்வில் பங்கேற்ற அவர், பிரதமருக்கு தனது தனது பாக்ஸிங் கிளவுஸை பரிசளித்துள்ளார். 

நம் ஊர் பக்கங்களில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பற்ற வைத்த நெருப்பு இன்னும் தணியாமல் உள்ள வேளையில் அதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, லவலினாவிடம் என்ன சொன்னார்?

“நான் இதை அணிந்துக் கொண்டால் ‘மோடி, புதிதாக ஏதோ இம்சை கொடுக்க உள்ளார்’ என அரசியல் சார்ந்து இயங்கி வருபவர்கள் சொல்வார்கள்” என சொல்லியுள்ளார். அதோடு இதனை ஏலத்தில் விடுத்து அதில் கிடைக்கும் தொகையை பொது சேவைக்கு பயன்படுத்தலாமா எனவும் பிரதமர் மோடி, லவ்லினாவிடம் கேட்டுள்ளார். 

மேலும் இந்த சந்திப்பின் போது லவ்லினாவின் தாயாரின் உடல்நிலை மற்றும் குடும்பம் குறித்து அவர் கேட்டுள்ளார். 

தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு லவ்லினா திரும்பியுள்ளார். அவருக்கு தட புடலாக வரவேற்பு கொடுத்து அசத்தியுள்ளனர் உள்ளூர் மக்கள். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்