[X] Close

‘திக்... திக்': தலிபான் பாதுகாப்புடன் ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய மக்கள்

உலகம்

Indian-Diplomats-and-Indian-Citizen-Thrilling-Journey-to-escape-from-Afghanistan-to-India-at-Monday-midnight-with-Taliban-s-security-escort

உலகையே உலுக்கி வரும் செய்தியாக மாறியுள்ளது ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. உள்நாடு, வெளிநாடு என பாராமல் மக்கள் தப்பிப் பிழைத்தால் போதும் என அந்த நாட்டின் தலைநகரான காபூலில் விமானம் ஏற முண்டியடித்து வருகின்றனர். 


Advertisement

image

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே விமானத்தில் 600 பேர் பயணித்த செய்தி கூட நம் கண்களில் சிக்கியிருக்கும். இந்நிலையில் தலிபான் பாதுகாப்புடன் கடந்த திங்கள் அன்று பின்னிரவு நேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர் இந்திய மக்கள் சிலர். அவர்களது அந்த ‘திக்... திக்... திக்’ பயணம் எப்படி நடந்தது. 


Advertisement

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் இரும்பு கதவுகளுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய தலிபான் படையினர் காத்திருந்தனர். தூதரகத்தின் உள்ளே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பீதியுடன் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய செய்தியை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். 

image

பகையை மறந்து பாதுகாப்பு கொடுத்த தலிபான்!


Advertisement

இந்தியாவின் பக்கத்து நாடான பாகிஸ்தான், தலிபானை நீண்ட நெடும் காலமாக ஆதரித்து வருகிறது. மறுபக்கம் இந்தியா ஆப்கானிஸ்தானில் அமைந்திருந்த அரசை கடந்த 20 வருடங்களாக ஆதரித்து வந்தது. கிட்டத்தட்ட தலிபானுக்கும், இந்தியாவுக்கும் ஆகவே ஆகாது என சொல்லும் அளவுக்கு இருவருக்குமான போக்கு இருந்து வந்தது. அதனால் தூதரகத்திற்கு வெளியே தலிபான்கள் ஆயுதங்களுடன் நின்றது அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் இந்தியர்களை பழிவாங்கும் நோக்கில் தலிபான்கள் அங்கு நிற்கவில்லை என தெரியவந்துள்ளது. மாறாக அவர்களை பத்திரமாக தாயகம் திரும்ப பாதுகாப்புக்காக அங்கு ஆயுதம் ஏந்தி நின்றுள்ளனர் தலிபான்கள். 

காபூல் விமான நிலையத்திற்கு இந்தியர்களை பத்திரமாக அழைத்து சென்று, அவர்கள் பயணம் மேற்கொள்ள தயாராக இருந்த ராணுவ விமானத்தில் ஏற தலிபான்கள் உதவியுள்ளனர். 

தூதரகத்தில் இருந்து வெளிவந்த 24 வாகனங்களை அவர்கள் எஸ்கார்ட் கொடுத்து விமான நிலையம் வரை அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் சிரித்த முகத்துடன் ‘Bye Bye’ சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளனர். 

image

முதலில் மறுப்பு : பின்னர் சம்மதம்!

முதலில் இந்தியர்கள் விமான நிலையம் செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தூதரகத்திற்கு உள்ளேயே சிறையில் இருக்க வேண்டி வருமா? எனவும் சிக்கியிருந்தவர்கள் எண்ணி உள்ளனர். இறுதியில் இந்தியா, தலிபான் அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன் பின்னரே தூதரகத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விமான நிலையத்திற்கு இந்தியர்கள் செல்ல தலிபான் அமைப்பினர் உதவியுள்ளனர். 

image

வழியில் நடந்த துப்பாக்கி சூடு!

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் காரணமாக எந்நேரமும் தாங்கள் பயணிக்கின்ற வாகனத்தை யாராவது தாக்கலாம் என உயிரை பிடித்துக் கொண்டே இந்தியர்கள் அந்த வாகனங்களில் பயணித்துள்ளனர். பாதுகாப்புக்காக வந்த தலிபான்கள் பயணத்தின் போது ஆங்காங்கே குவிந்திருந்த மக்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இறுதியில் விமான நிலையம் அடைந்தவுடன் அமெரிக்க படையினரை இந்தியர்கள் அணுகி உள்ளனர். அங்கு விமான போக்குவரத்தை நிர்வகித்து அமெரிக்கர்கள் தான். ஒருவழியாக ராணுவ விமானத்தில் இடம் பிடித்துள்ளனர். செவ்வாய் அன்று பொழுது விடியும் நேரத்தில் அந்த ராணுவ விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

அந்த விமானத்தில் பயணித்து வந்த பயணிகள் சொன்னது இது தான் ‘இந்தியா சொர்க்கம் சார்’ என்று. 

தகவல் உறுதுணை : Aljazeera


Advertisement

Advertisement
[X] Close