காஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

காஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
காஜல் அகர்வால் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தான் நடித்த விளம்பரத்தை ஒளிபரப்பி வரும் தேங்காய் எண்ணெய் நிறுவனத்திடம் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகை காஜல் அகர்வாலை வைத்து விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவனம் விளம்பரம் தயாரித்திருந்தது. இந்த விளம்பரத்தை ஒருவருட ஒப்பந்த காலத்திற்கு பிறகும் பயன்படுத்துவதாக காஜல் அகர்வால் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு தரவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் எண்ணெய் நிறுவனம் அளித்த விளக்கத்தில், விளம்பரம் தயாரிக்கப்பட்டு காப்புரிமை சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நடிகை காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி டி.ரவீந்திரன், வழக்கிற்காக எண்ணெய் நிறுவனம் செலவு செய்த தொகையை தர வேண்டும் எனவும் காஜல் அகர்வாலுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com