மு.க.அழகிரி, பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் - சிபி.ராதாகிருஷ்ணன்

மு.க.அழகிரி, பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் - சிபி.ராதாகிருஷ்ணன்
மு.க.அழகிரி, பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் - சிபி.ராதாகிருஷ்ணன்

விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பா.ஜ.க-வில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம் என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

பா.ஜ.க சார்பில் நடைபெறும் மக்கள் ஆசி யாத்திரையின் இரண்டாம் நாளான இன்று, இறுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் மக்களிடத்தில் பேசினார், அப்போது, “தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம். விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பா.ஜ.க-வில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com