[X] Close

“தொட்டாலே உதிரும் வீட்டிற்கு எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம்” - கமல் ட்வீட்

தமிழ்நாடு

KP-Park-apartment-leaks--Contractor-should-be-investigated--Kamal

கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு தரமாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கமல்ஹாசன், ”ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு இருக்கும் கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு தரமாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை கட்டப்பட்ட வீடுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதும் புதிய தலைமுறை கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Advertisement

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.

இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

(1/2)

— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021


Advertisement

Advertisement
[X] Close