மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெற உள்ளது.
மதுரையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற இரோம் ஷர்மிளா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலைத் தெரிவித்தார். திருமணம் என்பது தனது தனிப்பட்ட விவகாரம் எனவும் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் அவர் கூறினார். தன்னுடைய திருமணத்திற்கான மூன்று சாட்சிகள் மிரட்டப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் எனது திருமணம் நடைபெறும். கொடைக்கானலிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன், தொடர்ந்து மனித உரிமைக்காக போராடுவேன்" எனவும் ஷர்மிளா கூறினார்.
மேலும், “அம்பேத்கரின் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குறிப்பாக மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை இந்தியா மற்றும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். கக்கூஸ் ஆவணப்படத்தில் இந்த நடைமுறை இருப்பதை சுட்டிக்காட்டிய திவ்யபாரதி மீது நடவடிக்கைகள் எடுத்து இருப்பது வேதனை அளிக்கிறது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து நான் ஆதரவு அளிப்பேன்” என்று இரோம் ஷர்மிளா கூறினார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்