[X] Close

ஆப்கானிஸ்தான்: துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி - தற்போதைய நிலவரம் என்ன?

உலகம்

7-Dead-in-Kabul-Airport-Chaos-People-Fall-off-Flying-Plane

காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேரும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து 3 பேரும் உயிரிழந்தனர். நாட்டைவிட்ட தப்பிய முன்னாள் அதிபர் அஷரப் கனி ஓமன் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.


Advertisement

கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வந்த போர் பரபரப்பு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறையவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றி, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். அதே நேரத்தில் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். 4 கார்களில் நிரப்பிய பணத்தை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச்சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் ஏற்ற முடியாத அளவுக்கு அதிக பணம் இருந்ததால் எஞ்சியதை அங்கேயே விட்டுச்சென்றதாகவும் ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அஷ்ரப் கனி, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உடன் ஓமனில் உள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.


Advertisement

image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு கூடுதலாக 2,500 வீரர்களை அனுப்பியுள்ளதாகவும், மேலும் வீரர்களை அனுப்ப உள்ளதாகவும் அமெரிக்க ராணுவ மேஜர் ஜென்ரல் ஹங்க் டெயிலர் தெரிவித்தார். காபூர் விமான நிலையம் உரிய பாதுகாப்புடன் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் மேஜர் ஜென்ரல் குறிப்பிட்டார். அமெரிக்க குடிமக்களையும், நேச நாடுகளின் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைய முயன்ற ஆப்கான் ராணுவ விமானத்தை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுவீழ்த்தினர். இதில் அந்த விமானம் நொறுங்கி விழுந்த நிலையில் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. அதேபோல் எல்லைத்தாண்டிய 84 ஆப்கான் வீரர்களை உஸ்பெகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.


Advertisement

image

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 7 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானிலிருந்து எப்படியாவது வெளியேறிவிடவேண்டும் என்ற நோக்கில், விமானத்தின் சக்கரத்தை பிடித்து தொங்கியபடி பயணித்த மூன்று பேர் குடியிருப்புகள் மீது விழுந்து உயிரிழந்தனர்.

நாடு தலிபான்களிடம் சென்றிருக்கும் நிலையில் மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரின் வீடுகளையும் தலிபான்கள் சோதிக்க தொடங்கியுள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் கொடியை அப்புறப்படுத்தினர்


Advertisement

Advertisement
[X] Close