[X] Close

விக்கெட்டை பறிகொடுத்தார் ரூட் .. தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து அணி

விளையாட்டு

Indian-Cricket-Team-nearing-the-victory-against-England-in-Lord-s-Test

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் ஐந்து விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியின் போது இங்கிலாந்து அணி 5 விக்கேட் இழப்புக்கு 67 ரன்களை எடுத்துள்ளது. 


Advertisement

இந்திய அணி 298 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதன் மூலம் இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

பும்ரா வீசிய முதல் ஓவரில் பேர்ன்ஸ், ஷமி வீசிய அடுத்த ஓவரில் சிப்ளே என இருவரும் ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினர். தொடர்ந்து வந்த கேப்டன் ரூட் உடன் ஹசீப் ஹமீது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்திருக்க யாவரும் இஷாந்த் வேகத்தில் வீழ்ந்தார். பேர்ஸ்டோ தேநீர் இடைவேளைக்கு முந்தைய பந்தில் இஷாந்திடம் வீழ்ந்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகான முதல் ஓவரில் பும்ரா இங்கிலாந்து கேப்டன் ரூட் விக்கெட்டை வீழ்த்தினார். 


Advertisement

37 ஓவர்களில் இங்கிலாந்து 205 ரன்களை எடுக்க வேண்டி உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவுக்கே இப்போதைக்கு வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close