Published : 16,Aug 2021 09:09 PM

ஆகஸ்ட் 23-ல் நிறைவடையும் ’பீஸ்ட்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

vijays-Beast-Chennai-Schedule-will-continue-till-23rd-of-August

விஜய்யின் ‘பீஸ்ட்’ சென்னை படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்தினர். இம்மாத துவக்கத்தில் சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சி மீண்டும் கோகுலம் ஸ்டூடியோவில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

image

இந்த, படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கவிருக்கின்றன. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் படக்குழு சண்டைக்காட்சிகளுக்காக ரஷ்யா செல்லவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்