Published : 09,Aug 2017 01:10 PM
பழனிசாமி அரசுக்கு எதிரான வழக்கு: கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு எதிரான வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.