[X] Close

ஆப்கான் ஆட்சி மாற்றம் இந்தியாவை பாதிக்குமா? அமெரிக்காவின் முடிவு சரியானதா? - விரிவான அலசல்

உலகம்

ஆப்கானிஸ்தானில் ஏற்ப்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இந்தியாவை பாதிக்குமா? ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது சரியா? என்பன  உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை பார்க்கலாம்.


Advertisement

ஆப்கானிஸ்தான் விவகாரம் உலக நாடுகளில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியிருக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்துடன் பார்ப்பதைப்போல, உலக நாடுகளும் அச்சத்துடன், அக்கறையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. கடந்த 2001ம் ஆண்டு தலிபான்கள் அமெரிக்க படையினரால் அப்புறப்படுத்தபடும்போது, மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறியதை 20 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களின் வாழ்வு நிலை 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதற்கான சூழல் ஏற்படும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். பெண்களின் கல்வி, பொருளாதாரம் மேம்பட்டு வந்துகொண்டிருந்த சூழலில் மீண்டும் அவை பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புடன் செயல்பட தயார் என சீனா அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் ஒருபுறம் நாங்கள் தலிபானுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என மறுக்கிறது. ஆனால், ஆப்கான் அமெரிக்க படைகள் என ஏறக்குறைய 3 லட்சம் வீரர்கள் இருக்கும்போது, வெறும் 50 முதல் 70 ஆயிரம் படைகள் கொண்ட தலிபான்களால் எப்படி ஆப்கானிஸ்தானை கைப்பற்ற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. 20 ஆண்டுகளாக ஆப்கானில் அமெரிக்க படைகள் இருப்பதால் 2 டிரில்லியன் டாலர் செலவிடபட்டவேண்டிய சூழல் இருந்ததால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. இதை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பும் இதில் அடங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close