[X] Close

ஆப்கானில் இருந்து வெளியேறுபவர்களை இடையூறின்றி அனுமதிக்க வேண்டும் -உலக நாடுகள் வலியுறுத்தல்

உலகம்

More-than-60-countries-say-Afghans-others-must-be-allowed-to-leave-Afghanistan
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளி நாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
 
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. அதிபர் அஷ்ரப் கானி ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கான பேச்சுகள் நடந்து வரும் நிலையில் போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு பல்வேறு நாடுகளும் தங்களின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்கள், தூதுரக அதிகாரிகள் எனப் பலரையும் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் வேற்று நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்ற எச்சரிக்கை இருப்பதால் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
image
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சாலைகள், விமான நிலையங்கள் என அனைத்து வகையான போக்குவரத்து பாதைகளும் தொடர்ந்து திறந்தே இருக்க வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Advertisement

Advertisement
[X] Close