[X] Close

2ம் தவணை தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு: போலீசாருக்கு சங்கர்ஜிவால் சுற்றறிக்கை

தமிழ்நாடு

It-is-wrong-to-neglect-to-get-the-2nd-dose-vaccinated--shankar-jiwal-circular-to-the-police

"முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு" என்று சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.


Advertisement

அதில், “சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றை சவால்களுடன் எதிர்கொண்டு பணியாற்றும் காவல்துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல்துறையில் சமீபகால புள்ளி விபரங்களின்படி இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு மிக குறைவாகவும் மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை என தெரிய வருகிறது. கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

அதன் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்காக கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக, கோவிஷீல்ட் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி கிடைப்பதற்கு பல இடங்களில் தொடர்பு கொண்டு அதனை பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

33 கர்ப்பிணி பெண்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள். மேலும், 200 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதில் 99 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மட்டுமே போட்டுக் கொண்டுள்ளார்கள். மீதமுள்ள 101 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.


Advertisement

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் தவிர்க்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும். அதேபோல முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருப்பது தெரிய வருகிறது. இது தவறு.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் பாதுகாப்பானதாகும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தட்டுப்பாடு உள்ளது என காரணம் கூறாமல் தாமாகவே முன் வந்து கோவிட் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் கு.ஜெகதீசன் 9444488909 மற்றும் துணை ஆணையாளர், ஆயுதப்படை, அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் தனசேகரன் தொலைபேசி எண்; 9498133763 தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்" என்பதை தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

image

மேலும் அந்தந்த மாவட்ட, சிறப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள்/சிறப்புப் பிரிவு காவல் நிலைய அதிகாரிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தொடர்பு கொண்டு தனிக் கவனம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்வதின் பயன்பாட்டை எடுத்துக்கூறி உறுதி செய்ய வேண்டும்.

கோவிஷீல்ட் இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காத பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளிலிருந்து, சென்னை பெருநகர காவல்துறைக்கு உரிய தொகையினை செலுத்தி அதனை பெற்று காவலர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆவண செய்யப்பட உள்ளது. இதனை அனைத்து காவலர்களும், அமைச்சுப் பணியாளர்களும் பயன்படுத்தி கோவிட் தொற்றிலிருந்து தங்களையும், குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close