Published : 16,Aug 2021 08:52 AM

ஹைதியில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

7-2-magnitude-earthquake-shakes-Haiti--death-toll-rises-to-1-297

கரீபியன் நாடான ஹைதியில்ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான பயங்கரநிலநடுக்கத்தில்இறந்தவர்களின்எண்ணிக்கை 1,297 ஆகஉயர்ந்தது.

ஹைதி நாட்டு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டைநாடுகள்உதவிஅனுப்பதொடங்கியுள்ளன. மீட்புப்படையினர்இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக்மீட்க போராடி வருகின்றனர். சனிக்கிழமையன்றுஏற்பட்ட 7.2 ரிக்டர்அளவிலானநிலநடுக்கத்தில்கரீபியன்நாடான ஹைதியில்ஆயிரக்கணக்கானவீடுகள்மற்றும்கட்டடங்களைஇடிந்தது.

image

தென்மேற்குஹைதி, குறிப்பாகலெஸ்கெய்ஸ்நகரத்தைசுற்றியுள்ளபகுதிகள் அதிகபாதிப்பைச்சந்தித்துள்ளது. இந்தபேரழிவில் சிக்கிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆகஉயர்ந்துள்ளதாகவும், மருத்துவமனைகள் 5,700-க்கும் அதிகமானகாயமடைந்தவர்களைசமாளிக்கமுடியாமல்திணறிவருவதாகவும்ஹைதியின்சிவில்பாதுகாப்புநிறுவனம்தெரிவித்துள்ளது.

ஹைதியில் ஏற்கெனவேகொரோனாவைரஸ்தீவிரமடைந்துள்ளது, மேலும் அந்நாட்டின் கடுமையானகும்பல்வன்முறையால்தீவிரமானபொருளாதாரவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7 அன்றுஹைதியின் ஜனாதிபதிஜோவெனல்மொய்ஸின்படுகொலைக்குப்பிறகுகடும் அரசியல்நெருக்கடிஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

image

ஹைதிக்கு அமெரிக்கா, டொமினிகன்குடியரசுமற்றும்மெக்சிகோஉள்ளிட்டஅருகிலுள்ளநாடுகள், தேவையானஉணவுமற்றும்மருந்துகளைவிமானம்மற்றும்சாலைவழியாகஅனுப்பதொடங்கியுள்ளன.

11 ஆண்டுகளுக்குமுன்பு 2010-ஆம் ஆண்டு 7 ரிக்டர்அளவிலானநிலநடுக்கத்தால் ஹைதி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இன்று திங்கள்கிழமை ஹைதியில்அதிகமழை மற்றும் திடீர்வெள்ளஅபாயம் ஏற்படும் என்றுஅமெரிக்கதேசியசூறாவளிமையம் (NHC) எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்