[X] Close

சிங்கப்பூரில் முதன் முதலாக பிறந்த பாண்டா குட்டி

உலகம்

The-first-Giant-panda-to-be-born-in-Singapore-
சிங்கப்பூரில் முதல்முதலாக பாண்டா குட்டி ஒன்று பிறந்துள்ளது.
 
சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 பாண்டாக்களை சிங்கப்பூர் வன விலங்கு காப்பகத்தினர் பராமரித்து வந்தனர். எனினும் செயற்கை கருத்தரிப்பு மூலம் 'ஜியா ஜியா' என்ற பாண்டாவுக்கு குட்டி பிறந்துள்ளது. சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட நிபுணர்கள் பாண்டாவை பராமரித்து வருகின்றனர்.
 
இந்த ஆண்டின் தேசிய தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நாட்டில் முதன்முதலாக பாண்டா பிறந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement
[X] Close