Published : 15,Aug 2021 07:42 PM

திரிபுரா: பாஜகவினர் தாக்கியதாக 2 திரிணாமுல் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

2-Trinamool-MPs-Claim-They-Were-Attacked-In-Tripura

பாஜகவினரால் திரிபுராவில் இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளானதாக இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபரூபா பொட்டர் மற்றும் டோலா சென் ஆகியோர் பயணம் செய்த கார்கள் தலைநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு திரிபுரா மாவட்டத்தின் பெலோனியா நகருக்கு அருகில் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தங்கள் கார்கள் மீது செங்கற்கள் வீசப்பட்டதாகவும், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன என்றும், டோலா சென்னின் உதவியாளர் ஜாகிர் தலையில் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். எம்.பி.க்கள் தாக்கியவர்கள் பாஜக கொடிகளை ஏந்திவந்ததாகவும் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய திரிபுரா பா.. தலைவர்  நாபால் பானிக், “ இந்த முழு விஷயமும் ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மாநிலத்தில் பிரச்சனையை உருவாக்குவதற்காகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று கூறினார்.

image

அகர்தலாவில் திரிணாமுல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. ந்த சந்திப்பின் போது எம்.பி அபரூபா பொட்டர், ‘திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டுள்ளன’ என தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பல திரிணாமுல் மூத்த தலைவர்கள் சமீப நாட்களில் திரிபுராவில் பாஜக ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, "திரிபுராவின் பாஜக குண்டர்கள் தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டியுள்ளனர். இது திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பின் அரசாங்கத்தின் கீழ் திரிபுராவில் 'குண்டர் ராஜ்ஜியத்தின்' நிலையை வெளிப்படுத்துகிறது. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அங்குலம் கூட அசையாது "என்று கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்