Published : 15,Aug 2021 05:05 PM

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு - இடைக்கால தலைவர் நியமனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில், அதிகாரத்தை தலிபான் அமைப்பு கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது.

ஆனால் தற்போது தலிபான் அந்த அதிகாரத்தையும் கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசே தலிபான்களிடம் ஆட்சியை விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருப்பது மற்ற நாடுகளின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதால் அமெரிக்கர்களை அந்நாட்டு ராணுவம் மீட்டுவருகிறது.

முந்தைய ஆட்சி கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் , பொருளாதாரத் தடைகள் போன்றவற்றை புதிய அரசு எப்படி மேற்கொள்ளப்போகிறது என்பது பற்றியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் உள்நாட்டு பிரச்னைகளால் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மனித உரிமை பிரச்னைகள் போன்றவற்றையும் எப்படி கையாளப்போகிறது என்பது பற்றியும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் உலக நாடுகள் இந்த அரசை அங்கீகரிப்பார்களா என்பது குறித்த கேள்வியும் எழுந்திருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்