[X] Close

ஆப்கானிஸ்தான்: காபூலை ஒட்டிய மாகாணத்தை வசப்படுத்திய தலிபான்கள்

உலகம்

Taliban-conquered-the-province-of-Kabul-in-Afghanistan

ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலிபான்கள் தலைநகர் காபூல் அருகிலுள்ள மாகாணத்தை தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.


Advertisement

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் இன்னும் 3 வாரங்களில் முழுமையும் நாடு திரும்ப உள்ளன. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை வசப்படுத்த தலிபான்கள் அமெரிக்க ஆதரவு அரசுப் படையினருடன் ஆக்ரோஷமாக போரிட்டு 10க்கு மேற்பட்ட மாகாணங்களை கைப்பற்றிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக தலைநகர் காபூலின் தெற்குப் பகுதியில் உள்ள லோகர் என்ற மாகாணத்தை தலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தானை ஒட்டிய பகித்கா மாகாணத்தையும் தலிபான்கள் வசப்படுத்தியிருந்தனர். இதற்கிடையில் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் அஷ்ரஃப் கனி, ஆட்சியை தக்கவைக்க தீவிர முயற்சி செய்துவருவதாகவும், இதன் முடிவு சில நாட்களில் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close