தமிழக சட்டசபையில் நேற்று 2021-2022-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சட்டசபையில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.