[X] Close

முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்த இந்தியா: ஹாட்ரிக் வாய்ப்பை மிஸ் செய்த சிராஜ்

விளையாட்டு

India-all-out-for-364-in-the-first-innings-against-England-in-the-Second-Test-match-at-Lord-s-and-Siraj-Missed-Hat-trick

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை மிஸ் செய்தார் பவுலர் முகமது சீராஜ். இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட இந்தியா முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளது. 


Advertisement

image

இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் 129 ரன்கள், ரோகித் ஷர்மா 83 ரன்கள், கேப்டன் கோலி 42 ரன்கள், ஜடேஜா 40 ரன்கள், ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்திருந்தனர். 


Advertisement

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா மற்றும் ரகானே வழக்கம் போல ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் மட்டும் இந்தியா 88 ரன்களை சேர்த்து 7 விக்கெட்டுகளை இழந்தது. 

View this post on Instagram

A post shared by ICC (@icc)


Advertisement

இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் மார்க்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் பொட்டில் சமனில் முடிந்தது. தொடந்து இங்கிலாந்து அணி பேட் செய்ய தொடங்கியது. 

image

ஹாட்ரிக் வாய்ப்பை மிஸ் செய்த முகமது சிராஜ்!

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர். அதன்படி அந்த அணியிண் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களான பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்ளே நிதானமாக விளையாடினர். தேநீர் இடைவேளைக்கு பிறகான முதல் ஓவரை சிராஜ் வீசினார். 

அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிப்ளேவை அவுட் செய்தார். தொடர்ந்து மூன்றாவது பந்தில் ஹசீப் ஹமீதை அவுட் செய்தார். தொடர்ந்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புக்கான பந்தை இங்கிலாந்து கேப்டன் ரூட்டுக்கு வீசினார் அவர். அந்த பந்தை கூலாக தடுத்தார் ரூட். 

தற்போது களத்தில் ரூட் மற்றும் பேர்ன்ஸ் விளையாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close