Published : 13,Aug 2021 01:10 PM

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க ஆணை

3-rupees-will-be-reduced-for-1-litre-petrol

பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக விலையில் 3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாயைக் குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் இந்த பெட்ரோல் வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார். இந்த பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

* முழுமையான தகவல்களுக்கு > தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்