Published : 09,Aug 2017 07:42 AM

2022க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதை உறுதியேற்க மோடி அழைப்பு

Modi-invites-us-to-make-a-new-India-by-2022

2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழியை மக்கள் ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு அனுசரிக்கப்படும் இந்நேரத்தில் அதில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் தன் ட்விட்டர் பதிவில் இதைத்தெ ரிவித்துள்ளார். 1942ல் ஆங்கிலேயரிடமிருந்து விடுபட போராடியதாகவும் தற்போது வறுமை, பயங்கரவாதம், ஊழல், மத வாதம் உள்ளிட்டவற்றின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க போராடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர் 1947ல் இந்தியா பெற்ற சுதந்திரம் பிற நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தூண்டுகோலாக அமைந்தது என்றும் கூறினார். 


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்