[X] Close

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலையும் கிரிக்கெட் வீரர் ரஷித்கானின் ட்வீட்டும்

உலகம்,சிறப்புக் களம்

The-situation-in-Afghanistan-and-the-tweet-of-cricketer-Rashid-Khan-amid-Taliban-war-in-the-Country

போர் மேகங்கள் சூழ அதற்கு மத்தியில் அமைந்துள்ள நாடு தான் ஆப்கானிஸ்தான். அந்த நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஷித்கான் உலக அளவில் ஃபேமஸானவர். ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனும் கூட. அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை குறித்து ஒரு உருக்கமான தகவலை பகிர்ந்து வேண்டுகோளையும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்வீட்டாக பகிர்ந்திருந்தார். அது உலக நாடுகளின் தலைவர்களுக்கான தகவல்.

image

ட்வீட் மூலம் ரஷித் சொன்னது என்ன? 


Advertisement

“அன்புக்குரிய உலகத் தலைவர்களே! எனது நாடு பெரும் சிக்கலில் இப்போது உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தினந்தோறும் தங்களது உயிரை பலி கொடுத்து வருகின்றனர். எங்களது உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

எங்களை குழப்பத்தில் விடாதீர்கள். ஆப்கன் நாட்டு மக்களை கொல்வதையும், நாட்டை அழிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார் ரஷித். 

image

ஆப்கானிஸ்தான்!

ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 39 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். 6.52 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவு கொண்ட நாடு. பாகிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான் உட்பட மொத்தம் ஆறு சர்வதேச நாடுகளின் எல்லையை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. இத்தனை சர்வதேச எல்லைகளை கொண்டிருப்பதால் அது சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் என்பது ஆப்கனில் மிக அதிகம். குறிப்பாக உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தலிபான் படையினர் அங்கு ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். 

image

தலிபான்?

கடந்த 1994-இல் தலிபான் படையினரின் இருப்பு வெளியுலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது. பாஷ்டன் (Pashtun) மக்கள் அதிகம் இந்த அமைப்பில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 42 சதவிகிதம் அங்கம் வகிப்பதாக தகவல். 

குடியரசு நாடாக உள்ள ஆப்கானிஸ்தானை, அரபு நாடாக மாற்றி அதன் மூலம் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்பது இவர்களது நோக்கம். குறிப்பாக இஸ்லாமிய சட்டங்களின் படி நாட்டில் ஆட்சி நடத்துவது என்பது இவர்களது நிலைப்பாடு. அதற்காகவே இவர்களது போர் தொடங்கியது. 

1996 முதல் 2001 வரை இவர்களது ஆட்சி தான் ஆப்கானிஸ்தானில். அதன்பிறகு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் கவனம் செலுத்தியதால் தலிபான் ஆட்சியாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 

இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது தீவிரமாக போரிட்டு வருகின்றனர். அதற்கு அமெரிக்க ராணுவ படை தடையாக இருந்தது.

image

தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினரின் நிலை என்ன? 

1999 முதல் அமெரிக்க படையினர் அங்கு முகாமிட்டிருந்தனர். பில் கிளிண்டன், ஜார்ஜ் W புஷ், ஒபாமா, டிரம்ப் மற்றும் ஜோ பைடன் வரை ஐந்து அமெரிக்க அதிபர்கள் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். தற்போதைய அமெரிக்க அதிபர் பைடன் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தார். 

அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக போர் தொடுத்து, அதில் முன்னேற்றம் பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 65 சதவிகிதம் இப்போது தலிபான் கட்டுப்பாட்டில் என சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 90 நாட்களில் தலைநகர் காபூலை தலிபான் படையினர் தங்கள் வசம் கைப்பற்றுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அது நடந்தால் அவர்களது ஆட்சி மீண்டும் மலரும். 

image

ரஷித்கான் வேண்டுகோளை உலக தலைவர்கள் ஏற்பார்களா?

ரஷித் தனது ட்வீட்டில் தன் நாடு மற்றும் நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கலையும் தெளிவுப்படுத்தியுள்ளார். அந்த ட்வீட்டை படித்த ஒவ்வொருவரும் அதை அப்படியே படித்துவிட்டு கடந்து விட முடியாது. மனிதம் தழைத்தோங்க வேண்டுமென விரும்பும் உலக தலைவர்கள் முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும். அதோடு அங்கு அமைதியை குலைத்து வரும் பயங்கரவாத அமைப்பை அடியோடு அழிக்க வேண்டும். அது தான் ஆப்கானிஸ்தானுக்கு இப்போது தேவை. அவர்கள் நாடு என அப்படியே விட்டுவிட்டால் இன்று ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டு வரும் சிக்கலை சக்திவாய்ந்த நாடுகளும் நாளை எதிர்கொண்ட வேண்டியதிருக்கும். 

மனிதம் தழைக்கட்டும். 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close