[X] Close

13 ஆண்டுகள் கழித்தும் அதே பாண்டிங்.. ‘விஜய் - தோனி’ சந்திப்பு ஒரு த்ரோபேக்

விளையாட்டு

throw-back-over-vijay-dhoni-photos

'டிசிஷன் மேக்கிங் இஸ் அன் ஆர்ட். தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம்' மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் தோனி குறித்து பேசிய வசனம் இது. 'டெலிட்டட்' சீனாக இருந்தபோதிலும், விஜய் மனசில் தோனிக்கு 'டெலிட் ஆகாத இடம்' ஒன்று எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது என்பதையே அது காட்டியது.


Advertisement

2008ம் ஆண்டு அது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, ஐபிஎல் ஆட்டத்திற்காக சென்னை வந்திருந்தார். தோனி வரும் போது, சென்னை அணியின் நட்சத்திர தூதர்களாக தளபதி விஜய் மற்றும் நயன்தாரா நியமிக்கப்பட்டனர்.

image


Advertisement

இதன் தொடக்க விழாவின் போது, மகன் சஞ்சயை முதுகில் ஏற்றிக்கொண்டு நடிகர் விஜய் தோனியுடன் எடுத்த புகைப்படம் வெறித்தனமாக பரவியது. அவர்களுடன் மேத்யூ ஹைடனும் இருப்பார். பின்னாளில் இது தொடர்பாக மேத்யூ ஹைடன், ''விஜய்- தோனியுடன் இருக்கும் இந்த புகைப்படம் எனது ஃபேவரைட்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

image

அது அவருக்கு மட்டுமா ஃபேவரைட்? இருவரின் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அதுதான் ''ஆல் டைம் பேவரைட்''


Advertisement

''லைஃப்டைமுக்கு இன்னொரு போட்டோ கிடைத்தால் நல்லாருக்குமே" என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ''சர்ப்ரைஸ் கிஃப்ட்' கொடுத்திருக்கின்றனர் தலயும் தளபதியும் (ரசிகர்கள் இருவரையும் அப்படி அன்போடு அழைக்கிறார்கள்) . கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அதேபோன்றதொரு புகைப்படம். அதே பாண்டிங். 'இது போதுமே' என்று ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

image

யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று காலை முதல் தோனியுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் ஒன்று இரண்டு சமூக வலைதளங்களில் தென்பட ஆரம்பித்தது. இது உண்மையான புகைப்படம் தானா என எல்லோரும் ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில், தோனியுடன் விஜய் மற்றும் அவரது பீஸ்ட் படக்குழுவினர் இருக்கும் படங்கள் இணையத்தில் வந்து குவிந்தன.

image

விஜய் மற்றும் தோனியின் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட் தான். இணையமே சூடாகும் வகையில் இந்தப் புகைப்படங்களை வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். 

இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் சந்தித்துள்ளது தமிழ் இணைய உலகில் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது. 


Advertisement

Advertisement
[X] Close