சூர்யா தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் அதர்வா முரளி நடிக்கவிருக்கிறார்.
‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் ‘பரதேசி’ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதர்வா முரளி, வேதிகா, ரித்விகா என அனைவருமே நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள்.
துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்குகிறார். அதோடு, ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’வித்தகன்’பாலா தயாரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘அவன் இவன்’ படங்களில் சூர்யா பாலா இயக்கத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சூர்யா தயாரிப்பில் முதன் முறையாக பாலா படம் இயக்குறார். இப்படத்தின், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்றும் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?